திங்கள், 22 ஜூன், 2020

Dr.இராமகுரு அறிமுகஉரை

கட்டாய ஊரடங்கு காலத்தை யாரும் விரையம் செய்து விடாமல் தடுத்து,

விவேகத்துடன் திட்டமிட்டு தொடர் இணைய கருத்தரங்கம் வாயிலாக அனைவருக்கும் விழிப்புணர்ச்சி அளிக்கின்ற,

பல்கலைக்கழகங்களுக்கு இணையான தினமொரு 
பாடத்திட்டம் போல் வடிவமைத்து,

உன்னதமான அறப்பணியை செய்து வருகிற,

அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டத்தின் தோழர்கள் அனைவரும்,

 ஈரோடு மாவட்டம் நண்பர்கள் இலக்கியவட்டதின் ஒருங்கிணைப்பாளர் கே.முருகபூபதியின் நெஞ்சார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

தொய்வின்றி 100 ம் நாளை நோக்கி
வெற்றி நடை போடும் இன்றைய 90 ஆம் நாள் அமர்வின் சிறப்பு விருந்தினருக்கான 

*அறிமுகஉரை*

உயர்திரு.மருத்துவர் *இராமகுரு* அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை ஆகும்.

பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்புக்களை 
சென் சேவியர்ஸ் ஹை ஸ்கூல்
மற்றும் சென் சேவியர்ஸ் கல்லூரி பாளையங்கோட்டையில் படித்து பட்டம் பெற்றார்.

*எம்பிபிஎஸ்* மருத்துவ படிப்பை  திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்-ல் படித்து

*எம்எஸ் ஆர்தோ* 
*மற்றும் 
**டி ஆர்தோ*
 
ஆகிய முதுநிலைப் படைப்புக்களை மதுரையில் முடித்தார்கள்.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக முடநீக்கியல் துறையில் மிகதிறம்பட பணியாற்றி அதே கல்லூரியின் டீன் ஆக உயர்ந்த பொறுப்பு வகித்து பற்பல சேவைகளுக்குப் பிறகு 2009 இல் ஓய்வு பெற்றார்.

இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உயர் அறுவை சிகிச்சை செய்து குணமாக்கியவர்.

மாவட்ட அளவில் சுயஉதவி குழுக்கள் பல உருவாக காரணமாக இருந்ததுடன் அவர்களின் சுய தொழில் மேம்பாடு அடைய தையல்கலை உள்ளிட்ட பல பயிற்சிகளுக்கும் வித்திட்டவர். 

கிராமப்புறங்களில் மகளிருக்கு எண்ணற்ற தையல் மிசின்கள் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார். 

குழந்தைகள் விழிப்புணர்வு பெறுகின்ற வகையில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் மேம்பாடு அடைய பல்வேறு நடமாடும் நூலகங்களையும் உருவாக்கியவர்.

தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய செம்மல் மருத்துவர் *இராமகுரு* அவர்கள்.

பல்வேறு நீதியரசர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பல முன்னணி விருதுகளையும் பெறுகின்ற வகையில் திறம்பட பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அய்யாவின் அயராத சேவைக்காக
கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் சிறந்த மருத்துவருக்கான விருது 2010 ம் ஆண்டில் பெற்றார்.

2013 ல் மீண்டும் கலைஞரிடம் சிறந்த புத்தகத்திற்கான இலக்கிய விருது
பெறுகின்ற நல்வாய்ப்பினையும் அதற்கான தகுதியையும் ஏற்படுத்திக் கொண்டார்.

இன்றைய முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் 2019 ல் சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் அம்பேத்கர் விருதும் பெற்ற பெருந்தகை அய்யா மருத்துவர் *இராமகுரு* அவர்கள்.

இந்த அறிமுக உரையை மேலும் சிறப்பாக கொண்டு வரலாம் என 
நினைத்து இணையதளத்தில் அய்யாவின் பெயரையும் அலைபேசி எண்ணையும் இட்டு தேடினேன்.

ஐயா அவர்கள் பொறுப்பு வகித்த, இன்றும் வகிக்கின்ற எண்ணற்ற அமைப்புகளின் பட்டியல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. 

அவற்றையெல்லாம் அள்ளிக் கொண்டு வர என்னால் இயலவில்லை. சிறிதளவு கிள்ளிக் கொண்டு வந்தேன்.

வாய்ப்புக்கு நன்றிகள் பல கூறி விடை பெறுகிறேன். 

கே.முருகபூபதி
இலக்கியவட்டம்
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை: